அரச ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ட்ரம்ப்

73 0

அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 

 

அதன்படி, அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வெளிநாட்டு பணிகளை மேற்கொண்டு வந்த 246 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இவர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.