கிம்புலாவலயில் வீதியோர கடைகளை அகற்றியதால் பதற்றம்

61 0

கிம்புலாவல சந்தியில் வீதியின் இருபுறமும் உள்ள கடைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் அகற்ற முயன்ற போது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

குறித்த கடைகள் சட்டவிரோதமானது என கூறி, அதன் அதிகாரிகள் வீதியின் இருபுறமும் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

அவர்கள் சில கடைகளை உடைத்து லொறியொன்றில் ஏற்றிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் அழைக்கப்பட்டனர்.

இருப்பினும், எழுந்த பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஏற்றப்பட்ட பொருட்களை கடைகாரர்களிடம் திருப்பி வழங்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.