வெளிநாடு சுற்றுலா சென்ற ஜேர்மன் இளம்பெண் மாயம்

67 0

 அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் இளம்பெண்ணொருவர் மாயமாகியுள்ளார்.

ஜேர்மன் இளம்பெண் மாயம்

ஜேர்மானியரான கரோலினா Carolina Wilga, 26) என்னும் இளம்பெண், மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

 

ஜூன் மாதம் 29ஆம் திகதி, கரோலினா Beacon என்னும் நகரிலுள்ள கடை ஒன்றில் கடைசியாக காணப்பட்டுள்ளார். அதற்குப் பின் அவரைக் காணவில்லை.

ஜேர்மனியிலுள்ள தனது குடும்பத்துடன் அவர் தொடர்ந்து தொடர்பிலிருந்த நிலையில், தற்போது அவருடைய மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மதியம் Karroun Hill என்னுமிடத்துக்கு அருகில் கரோலினுடைய வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு சுற்றுலா சென்ற ஜேர்மன் இளம்பெண் மாயம் | Germany Women Missing Who Went For Australia

பொலிசார் கரோலினை தீவிரமாகத் தேடிவரும் நிலையில், அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் அவர்கள் நாடியுள்ளார்கள்.