அன்புமணி எனது பெயரை பயன்படுத்த கூடாது: ராமதாஸ் கண்டிப்பு

69 0

பாமக-வன்​னியர் சங்க தஞ்​சாவூர், திரு​வாரூர் மாவட்ட பொதுக்​குழுக் கூட்​டம் கும்​பகோணத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பாமக நிறுவனர் ராம​தாஸ் பேசி​ய​தாவது: ஐந்து வயது குழந்​தை​போல நான் உள்​ள​தாக ஒரு​வர் (அன்புமணி) கூறி​னார். அந்​தக் குழந்​தை​தான் 3 ஆண்​டு​களுக்கு முன்பு அவரை தலை​வ​ராக்​கியது. தந்தை சொல்​மிக்கமந்​திரம் இல்லை.

எனவே, என் பேச்சை கேட்​க​வில்லை என்​ப​தால், அவர் எனது பெயரை பயன்​படுத்​தக் கூடாது. எனது இனிஷியலை வேண்​டு​மா​னால் போட்​டுக் கொள்​ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

ராமதாஸ் வீட்டில் அன்புமணி: பாமக நிறுவனர் ராமதாஸ் கும்பகோணத்துக்கு சென்றுள்ள நிலையில், தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அன்புமணி சென்றார்.

ராமதாஸின் முன்னாள் உதவியாளர் நடராஜனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திண்டிவனம் சென்ற அன்புமணி, நேற்று இரவு தைலாபுரம் ராமதாஸ் வீட்டுக்குச் சென்று, தாயார் சரஸ்வதியை சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.