மேக்ரான் மனைவி பிரித்தானிய பயணத்தின்போது முகத்தை தூக்கிவைத்துக்கொண்டது ஏன்?

75 0

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், அவரது மனைவியான பிரிஜிட் மேக்ரானும் பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வந்தபோது, பிரிஜிட் நடந்துகொண்ட விதம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது.

மேக்ரானை அவமதித்த பிரிஜிட்

மேக்ரான் தம்பதியர் பிரித்தானியா வந்திறங்கியதும், விமானத்திலிருந்து இறங்கிய மேக்ரான், தன் மனைவிக்காக கையை நீட்டிக்கொண்டு காத்திந்தார்.

மேக்ரான் மனைவி பிரித்தானிய பயணத்தின்போது முகத்தை தூக்கிவைத்துக்கொண்டது இதனால்தான் | French 1St Lady Brigitte Sad For Her Sister Death

ஆனால், அவரோ கணவருக்கு கை கொடுக்காமல் படிக்கட்டுகளைப் பிடித்தபடி விமானத்திலிருந்து இறங்கினார்.

ஏற்கனவே மேக்ரானை பிரிஜிட் அறைந்த விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், மீண்டும் அவரை அலட்சியம் செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், மேக்ரான் மனைவி பிரிஜிட், பிரித்தானிய பயணத்தின்போது நடந்துகொண்ட விதத்தின் பின்னணியில் ஒரு சோக செய்தி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், பிரிஜிட்டின் அக்காவான Anne-Marie Trogneux (93), கடந்த வாரம் மரணமடைந்துள்ளார்.

மேக்ரான் மனைவி பிரித்தானிய பயணத்தின்போது முகத்தை தூக்கிவைத்துக்கொண்டது இதனால்தான் | French 1St Lady Brigitte Sad For Her Sister Death

தன் சகோதரி மரணமடைந்த துக்கத்திலிருந்த நிலையிலும், அரசு முறைப்பயணத்தை தவிர்க்கக்கூடாது என்பதற்காக அவர் மேக்ரானுடன் பிரித்தானியாவுக்கு பயணித்துள்ளார்.

பிரிஜிட், ஏற்கனவே தனது இன்னொரு சகோதரியான Maryvonne Trogneuxஐ கார் விபத்தொன்றில் இழந்தார். அப்போது அவரது சகோதரிக்கு வயது 27 மட்டுமே.

ஆக, தனக்கு வழிகாட்டி போல திகழ்ந்த இன்னொரு சகோதரியையும் இழந்த துக்கத்தில் இருந்ததால்தான் பிரிஜிட் பிரித்தானிய பயணத்தின்போது அப்படி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.