களுத்துறை – ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலிம்ப பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் ஒருவர் ஹொரணை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கஹதுடுவை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 52 லீற்றர் 500 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

