தமிழ் மக்களை காயப்படுத்த வேண்டும் என்றால் மொழியை தாக்க வேண்டும், சிங்கள் மக்களை காயப்படுத்த வேண்டும் என்றால் இனத்தை தாக்க வேண்டும், முஸ்லிம் மக்களை தாக்கம் வேண்டும் என்றால் மதத்தை தாக்க வேண்டும் என அரசியல்வாதிகள் நன்கு அறிந்திருந்ததாக மகளீர் மற்றும் சிறுவர் விவாகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல் ராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் வாழும் மக்கள் இடையே தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இருப்பது மொழிக்காகவும், சிங்கள மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இருப்பது இனத்திற்காகவும் முஸ்லிம் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இருப்பது மதத்திற்காகவும் என எமது பேராசிரியர் யோகராஜா கூறியதை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
இதனை பயன்படுத்தியே அரசியல்வாதிகள் அரசியல் செய்தனர்.
எம்மை போன்ற சாதாரண மக்கள் இதனை அறிந்து கொண்டிருக்கவில்லை.
எமது மதத்தை தாக்கும் போது, பிரிந்து சென்று மதத்தை காப்பாற்ற போராடினோம்.
பதாதைகளில் எழுத்துக்கள் பிழையாக இருக்கும் போது நாம் அது தவறுதலாக இடம்பெற்றதாக எண்ணுகிறோம்.
இல்லை வேண்டும் என்றே பிழையாக போடப்பட்டுள்ளது.
எனவே தான் மொழிக்கு முன்னுரிமை வழங்காததால் அதனை காப்பாற்ற போராடினோம் என்றார்.

