வனிந்து ஹசரங்க தொடர்பில் நிச்சயமற்ற தன்மை

73 0

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக நாளை (10) பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பது குறித்து நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவரது தொடையில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நாளை (10) நடைபெறவுள்ளது.