பிரித்தானியா அதனை நிறுத்த வேண்டும்: இமானுவல் மேக்ரான்

84 0

அமெரிக்கா மற்றும் சீனாவை சார்ந்திருப்பதை பிரித்தானியாவும், பிரான்ஸும் நிறுத்த வேண்டும் என இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தினரால் வரவேற்கப்பட்ட இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron), நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார்.Emmanuel Macron

அவர் பிரெக்சிட்டிற்கு பிறகு, பிரித்தானிய அரசுப் பயணத்திற்கு அழைக்கப்பட்ட முதல் ஐரோப்பியத் தலைவராக இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் திரும்பியதைக் கொண்டாடினார்.

மேக்ரான் பாதுகாப்பு, குடியேற்றம், காலநிலை மற்றும் வர்த்தகம் உள்ளிட்டவற்றில் ஐரோப்பாவை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

உலகிற்குக் காட்ட வேண்டும்

மேலும் அவர், “நமது கூட்டணி அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்பதை ஐக்கிய இராஜ்ஜியமும், பிரான்ஸும் மீண்டும் உலகிற்குக் காட்ட வேண்டும்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை அதிகப்படியாக சார்ந்திருப்பதை பிரித்தானியாவும், பிரான்ஸும் நிறுத்த வேண்டும்.

நமது பொருளாதாரங்களையும் நமது சமூகங்களையும்இந்த இரட்டை சார்பு ஆபத்து நிலையில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்றார். Emmanuel Macron/King Charles