இது தொடர்பில் தெரியவருவதாவது,
இனந்தெரியாத நபர்கள் சிலர் பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் கூரை வழியாக சிறைச்சாலைக்குள் பொதி ஒன்றை வீசி சென்றுள்ளார்.
இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பொதியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த பொதியை சோதனையிட்டுள்ளனர்.இதன்போது இந்த பொதியிலிருந்து 8 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட 8 கையடக்கத் தொலைபேசிகளும் மேலதிக விசாரணைக்காக இரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

