நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (07) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் , இராணுவ வீரர்கள், விமானப் படை வீரர்கள் மற்றம் கடற்படை வீரர்கள் உள்ளிட்ட 764 பேர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 73 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 01 கிராம் 705 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 9 கிலோ 38 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 1139 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 08 பேரும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 05 பேரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

