இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் தேசிய இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது

70 0

வர்த்தகர் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் தேசிய இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சனிக்கிழமை (6) பிற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய தேசிய இறைவரித்திணைக்களத்தில் வைத்து சந்தேக நபர் சனிக்கிழமை (6) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டிலே அந்தத் பிரதி ஆணையாளர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தெமட்டகொட கொலன்னாவை பிரதேசத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் குறித்த வர்த்தகர்கருக்கு சொந்தமான நிறுவனத்துக்கான வருடாந்த பரிசோதனை அறிக்கையை வெளியிடுவதற்காக சந்தேக நபர் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சமாக கோரியுள்ளார்.

இருப்பினும் 50 ஆயிரம் ரூபாவை மாத்திரம் கோரியுள்ள சந்தேக நபர் அதில் 42 ஆயிரம் ரூபாவை கடந்த 3 ஆம் திகதி இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய மிகுதி 8 ஆயிரம் ரூபா பணத்தை இன்று பெற்றுக் கொள்ள முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.