கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு நான்கு இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற போது, நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சுற்றுலா பயணிகளில் ஒரு குழுவினர் வேனில் இருந்து இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது, வீதியோரத்தில் அருகில் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து சுற்றுலா பயணிகளை துரத்தியபோது அவர்களைப் பாதுகாப்பாக வேனில் ஏற்றிய சாரதி இறுதியில் சாரதி இருக்கையில் ஏறும் போது குளவி கொட்டுக்கு இலக்கானதாக நானுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தகவல் கிடைத்த உடனே நானுஓயா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர் பின்னர் குளவித் தாக்குதலுக்கு உள்ளான சாரதி தனது உடல்நிலை மோசமாக இல்லை என்றும், சிகிச்சைக்காக நுவரெலியாவுக்குச் செல்வதாகவும் கூறியதை அடுத்து, நானுஓயா பொலிஸார் சுற்றுலா பயணிகளை அதே வேனில் நுவரெலியா வரை பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

