இரு குழல் துப்பாக்கிகளின் இலக்கு ஒன்றுதான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிந்தனையை அழித்து தமிழீழக் கோட்பாட்டை சிதைத்தழிப்பதுதான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கு விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவதன் ஊடாக தமிழீழ விடுதலை என்னும் இலக்கு நோக்கிய சிந்தனையை, சித்தாந்தத்தை முற்றாக அழித்தொழிக்கலாம் என சிங்கள, பௌத்த பேரினவாதம் மனப்பால் குடிக்கின்றது.
மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை சிறிலங்காவும், பிராந்திய வல்லரசுகளும் பலவிதமான புலனாய்வுச்சதி வலைப்பின்னல்களை உருவாக்கினார்கள். ஆனால் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனத்தின் முன்னே அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. துரோகத்தனங்கள் யாவும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. எமது தலைமையின் நிதானமான துணிச்சலான போராட்ட நகர்வுகள் எதிரிகளையும், துரோகிகளையும், ஏகாதிபத்தியவாதிகளையும் திக்கித் திணற வைத்தது. 2009 மே 18 உடன் விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டது என சிறிலங்காவும், பிராந்திய வல்லரசும், ஏகாதிபத்தியமும் பகற்கனவு கண்டது.
ஆனால் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தற்காலிக இராணுவப் பின்னடைவிற்குப் பிறகும் தமிழீழம் என்ற கோட்பாட்டை இவர்களால் நெருங்க முடியவில்லை. எனவே தமிழர்கள் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட பிறகும் எவ்வாறு பலமாக ஒருங்கிணைந்து போராடுகிறார்கள், இவர்களின் பலம் எது எனப் பகுப்பாய்வு செய்கிறார்கள். அப்போதுதான் அவர்களிற்குத் தெளிவாக விடயம் புரிகிறது. மேதகு என்ற வே.பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்தான் தமிழர்களின் மாபெரும் உந்துசக்தி என உணர்ந்து கொள்கிறார்கள். எனவே தமிழீழம் என்ற கோட்பாட்டை சிதைத்து அழிக்கவேண்டுமாயின், எங்கள் தலைவர் பிரபாகரன் என்னும் தமிழீழ விடுதலைக்கவசத்தை முதலில் அழிக்கவேண்டும். மேதகு பிரபாகரன் என்னும் மாபெரும் பலம் மக்கள் மனதிலிருந்து அகற்றப்பட்டால் தமிழீழம் என்னும் இலக்கு தகர்ந்துவிடும் இதுவே அவர்கள் போட்ட கணக்கு. அதன்படியே கடந்த 3 ஆண்டுகளாக எதிரும்புதிருமாக இரண்டு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன.
ஒன்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறார், இரண்டாவது அவர் 2009 மே 17, 18, 19 ஆகிய திகதிகளில் வீரச்சாவடைந்துவிட்டார். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் யாரை எதிர்த்து நாம் போரிட்டோமோ, அந்த சிங்கள இராணுவத்தளபதிகளை (கமால் குணரட்ண) மேற்கோள் காட்டி, இன அழிப்பு போர்க்குற்றவாளிகளின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எமது தேசியத் தலைவருக்கு, விளக்கேற்றி வீரவணக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 17, 18, 19 என முடிவுக்கு வர முடியாமல், தெளிவில்லாமல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆகஸ்ற் 2ம் திகதிதான் வணக்க நிகழ்வு, ஆனால் சிறிலங்கா சிங்கள இராணுவத்தளபதி கமால் குணரட்ணவின் Road to nanthikkadal என்னும் புத்தகத்தை ஆதாரமாக வைத்து மே 18 என முடிவு எடுத்தாகிவிட்டது.
தேசியத் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்னும் பொய்ப்பரப்புரையை நிறுத்த வேண்டுமாயின் வீரவணக்க நிகழ்வை செய்தேயாக வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் நியாயப்படுத்துகிறார்கள். இதிலிருந்த என்ன விளங்குகிறது. இரு குழல் துப்பாக்கியின் இலக்கு ஒன்றுதான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் சிந்தனைதான் 2009 மே 18 ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழம் என்னும் தேசத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை வழிநடாத்துகிறது என்பதை எதிரிகள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். எனவே தமிழர்களின் மனங்களிலிருந்து, அந்த வாழும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தத்தை துடைத்து அழிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, தலைவர் இருக்கிறார், தலைவர் இல்லை என்ற இரண்டு நாசகார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விழிப்பே விடுதலையின் முதற்படி என்னும் மேதகு வின் சிந்தனையின் வழியில் தமிழினம் இரண்டு சவால்களையும் எதிர்கொண்டு, மாவீரர்களின் சக்தியின் துணை கொண்டு, மீண்டு வரும். தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிந்தனை எம்மைத் தொடர்ந்தும் வழிநடத்தும். அனைத்துலகச் சிந்தனைப்பள்