கண்டி மாவட்ட செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,
கைகாவல பாலத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக குறித்த பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன், மீமுரேக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் திருத்தப் பணிகள் முடிவடையும் வரை அப்பகுதி ஊடாக பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என கண்டி மாவட்ட செயலாளர் வாகன சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருத்தப் பணிகள் மூன்று நாட்களில் முடிவடையும் என பொறியியலாளர்கள் அறிவித்துள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.