‘பிஹார் மாநிலத்தின் மகள்’ – டிரினிடாட் பிரதமர் கம்லாவுக்கு மோடி பாராட்டு

20 0

டிரினி​டாட் பிரதமர் கம்லா பெர்​ஷத், பிஹார் மாநிலத்​தின் மகள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்​டி​யுள்​ளார்.

பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார். இதை முன்​னிட்டு கானா, டிரினி​டாட் அண்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய 4 நாடு​களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்​கட்​ட​மாக கானா நாட்​டுக்கு கடந்த 2,3-ம் தேதிகளில் சுற்​றுப் பயணம் செய்​தார். கானா பயணத்தை முடித்​துக் கொண்டு டிரினி​டாட் அண்ட் டொபாகோ நாட்​டுக்கு பிரதமர் மோடி முதல்​முறை​யாக சென்​றுள்​ளார். டிரினி​டாட் பிரதமர் கம்லா அழைப்​பின் பேரில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.

கரீபியன் கடல் பகு​தி​யில் உள்ள 2 தீவு​கள் அடங்​கிய நாடு​தான் டிரினி​டாட் அண்ட் டொபாகோ. வெனிசுலா நாட்​டுக்கு அரு​கில் இந்த நாடு உள்​ளது. இந்த நாட்​டின் பிரதம​ராக கம்லா பெர்​ஷத் பிசெஸ்​ஸார் பதவி வகிக்​கிறார். இவரை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​தார். இந்​தி​யர்​கள் பங்​கேற்ற கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசும்​போது, ‘‘டிரினி​டாட் பிரதமர் கம்லா பெர்​ஷத், பிஹார் மாநிலத்​தின் மகள்’’ என்று புகழ்ந்​தார். பிஹார் மாநிலத்​தின் பக்​சார் மாவட்​டத்​துக்​கும், கம்​லா​வுக்​கும் உள்ள மூதாதையர் தொடர்பு குறித்து புகழ்ந்து பேசி​னார். அதே​போல, பிரதமர் மோடியை​யும் கம்லா பாராட்டி பேசி​னார். மோடி எழு​திய ‘ஆங்க் ஆ தன்யா சே’ என்ற கவிதை நூலில் இருந்து சில கவிதைகளை​யும் கூறி​னார்.

முதல் பெண் பிரதமர்: டிரினி​டாட்​டின் தென் பகு​தி​யில் உள்ள சிபாரியா என்ற பகு​தி​யில் கடந்த 1952 ஏப்​ரல் 4-ம் தேதி பிறந்​தவர் கம்​லா. இந்த நாட்​டின் முதல் அட்​டர்னி ஜெனரல், பெண் எதிர்க்​கட்சி தலை​வர், முதல் பெண் பிரதமர் என்ற பெரு​மைக்​குரிய​வர். சிறந்த வழக்​கறிஞ​ராக, அரசி​யல் தலை​வ​ராக திகழ்​பவர். கடந்த 2010 முதல் ஐக்​கிய தேசிய காங்​கிரஸ் கட்​சி​யின் தலை​வ​ராக இருக்​கிறார். கடந்த 1995-ல் சிபாரியா தொகு​தி​யில் போட்​டி​யிட்டு எம்​.பி.​யா​னார். அதன்​பிறகு, கல்​வித் துறை அமைச்​சர் உட்பட பல்​வேறு கேபினட் பதவி​களை வகித்​தார்.

இவரது முன்​னோர்​கள் பிஹார் மாநிலம் பக்​சார் மாவட்​டத்​தில் உள்ள பேலுபூர் கிராமத்​தில் வசித்​தவர்​கள். கடந்த 2012-ல் கம்லா தனது சொந்த கிராமத்​துக்கு வந்​தார். அப்​போது பாரம்​பரிய நாட்​டுப்​புறப் பாடல்​கள் பாடி,மலர் மாலை அணி​வித்து மக்​கள் உற்​சாக​மாக வரவேற்​றனர். அப்​போது அவர், ‘‘என் சொந்த வீட்​டுக்கு வந்​தது ​போல உணர்​கிறேன்’’ என்று நெகிழ்ச்​சி​யுடன் கூறி​னார்.

இந்​தியா – டிரினி​டாட் உறவை மேம்​படுத்​து​வ​தில் இவரது பங்​களிப்​புக்​காக, வெளி​நாட்​ட​வருக்கு வழங்​கும் இந்​தி​யா​வின் மிக உயரிய விரு​தான ‘பிர​வாசி பார​திய சம்​மான்’ விருதை 2012-ல் அப்​போதைய குடியரசு தலை​வர் பிர​திபா பாட்​டில்​ வழங்​கியது குறிப்​பிடத்​தக்​கது.

மகா கும்பமேளா புனித நீரை பரிசளித்த பிரதமர்: டிரினிடாட் பிரதமர் கம்லாவுக்கு மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமம் மற்றும் சரயு நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், ராமர் கோயில் மாதிரி வடிவம் போன்றவற்றை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: டிரினிடாட் பிரதமர் கம்லாவின் முன்னோர்கள் பிஹார் மாநிலத்தின் பக்சார் மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர். அவர் பிஹார் மாநிலத்தின் மகள். கம்லாகூட ஒருமுறை தனது சொந்த கிராமத்துக்கு வந்து சென்றுள்ளார். அங்குள்ள மக்கள் அவரை தங்களது மகளாக பார்க்கின்றனர். உலகின் மிகப்பெரிய ஆன்மிக கூட்டம், உத்தர பிரதேசத்தின் மகா கும்பமேளாவில் கூடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அங்கிருந்து திரிவேணி சங்கமம் மற்றும் சரயு நதியின் புனித நீரை பிரதமர் கம்லாவுக்காக கொண்டு வந்தேன். இவ்வாறு மோடி பேசினார். ‘‘டிரினிடாட்டில் வசிக்கும் மக்களில் 45 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்’’ என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.