ஜேர்மனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் ஒருவர் கிருமி தாக்கத்தினால் நேற்றையதினம் (02) உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கு, பகுதியில் வசித்து வந்த நடராசா கேதீஸ்வரநாதன் (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கடந்த ஜனவரி மாதம் ஜேர்மனியில் இருந்து வருகை தந்து கோப்பாய் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு நேற்றையதினம் (02) உயிரிழந்துள்ளார்.
ஜேர்மனியல் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் உயிரிழப்பு! | Old Man Died Of Infection Jaffna Came From Germany
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார்.
அடையாளங்காண முடியாத கிருமித் தாக்கத்தினால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

