கஹவத்தையில் பொலிசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல்

76 0

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் அளித்ததற்காக கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞரின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (03) மதியம் குடும்ப கல்லறையில் நடைபெற்றன.இறந்தவர் 22 வயது இமாந்த சுரஞ்சன் என அடையாளம் காணப்பட்டார்.

இளைஞரின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு வியாழக்கிழமை (03) பிற்பகல் பொலிசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமத்தில் பாதுகாப்புக்காக சுமார் 150 பொலிசார் நிறுத்தப்பட்டிருந்த சூழலில் இது நடந்தது.

கொலை செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டினர்.

தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலையில், பொலிசார் அப்பகுதியிலிருந்து விலகி, பின்னர் படைகளை அனுப்பி கிராம மக்களைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் பல கிராம மக்கள் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், குறித்த இளைஞரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் வீட்டில் ஒரு கும்பல் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 ஆம் தேதி இரவு, புங்கிரியா, கஹவத்த, பழன்சூரியகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சகோதரர்களும் மற்றொரு இளைஞரும் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்தது.

அந்த நேரத்தில், காவல்துறையினர் போல் வேடமிட்ட ஒரு குழு இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்று, இளைஞர்களில் ஒருவரை சுட்டுக் கொன்றது.

கடத்தப்பட்ட மற்றொரு இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.