ஓமந்தையில் கோர விபத்து: தாயும் மகளும் படுகாயம்

66 0

வவுனியா, ஓமந்தை பறநாட்டாங்கல் பகுதியில் தொடருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (02) இடம்பெற்ற விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஏ9 வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவை ஊடாக பறநாட்டாங்கல் வீதிக்கு ஏற முற்பட்டபோது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்தையடுத்து குறித்த தொடருந்து அரைமணிநேரம் தாமதமாகவே கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.