ஏழை நாடுகளுக்கு உதவி நிறுத்தம்… ராணுவத்துக்கு அதிக நிதி: ஜேர்மனியின் முடிவு

86 0

வறுமையில் வாடும் மக்களுக்கு உதவியா அல்லது நாட்டின் பாதுகாப்பா? எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம் என கூறும் நிலையில் பல நாடுகள் உள்ளன.

ஏழை நாடுகளுக்கு உதவி குறைப்பு, பாதுகாப்புக்கு அதிக நிதி

அவ்வகையில், ஜேர்மனியும் தனது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், வறுமையில் வாடும் நாடுகளுக்கு வழங்கும் நிதியைக் குறைத்து, நாட்டின் பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்க முடிவு செய்துள்ளது.

 

2025ஆம் ஆண்டுக்கான ஜேர்மனியின் வரைவு பட்ஜெட்டில் கடுமையான வெட்டுக்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக, பொருளாதார கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு முந்தைய ஆண்டைவிட ஒரு பில்லியன் யூரோக்கள் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழை நாடுகளுக்கு உதவி நிறுத்தம்... ராணுவத்துக்கு அதிக நிதி: ஜேர்மனியின் முடிவு | Germany Plans To Rise Defence Budget Cut Aid Funds

இதனால் பல தொண்டு நிறுவனங்களும், அவற்றை நம்பியிருக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறார்கள்.

இந்நிலையில், பொருளாதார கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சரான ரீம் அலபாலி ராடோவன் (Reem Alabali Radovan), கூட்டணி அரசின் பட்ஜெட் கடும் வேதனையை ஏற்படுத்துவதாக இருந்தாலும், ஜேர்மனி உலக அளவில் நிறைவேற்றவேண்டிய தனது கடமையை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது என்று கூறியுள்ளார்.