வரலாற்றில் முதல் முறையாக, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் இன்று (30) 18,000 புள்ளிகளை கடந்துள்ளது.
இதற்கமைய, இன்றைய நாள் நிறைவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 153.98 புள்ளிகளாக அதிகரித்து 18,014.86 புள்ளிகளாக பதிவானது.
இந்நிலையில் இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் நிறைவில் S&P SL20 குறியீடு 62.74 புள்ளிகள் உயர்வடைந்து, 5,345.80 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இன்றைய நாளில் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.38 பில்லியன்களாக பதிவு செய்யப்பட்டது.

