இசைப்பிரியா பாலசந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்

103 0

இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலசந்திரன் பிரபாகரன் ஆகியோர் கொல்லப்பட்டமை குறித்து  விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும் முறைப்பாட்டினை பொலிஸ்தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதிபொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ளதாக சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.

தனது முறைப்பாடு தற்போது பொலிஸ்தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதிபொலிஸ்மா அதிபரினால் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் அதிகாரப்பூர்வ சட்ட வழிகள் மூலம் முறையாக விசாரிக்கப்படுவதையும் ஓரங்கட்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக நான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன். எனது முன்னுரிமை வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகும்.என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்கு முன்னோக்கி நகரும்போது உங்கள் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஈடுபாட்டிற்காக பொதுமக்களுக்கும் நன்றி கூறுகிறேன்.என அவர் குறிப்பிட்டுள்ளார்.