ஹெரோயின் போதைப்பொருள், 7 இலட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவர் கைது

68 0

களுத்துறை வடக்கு  பொலிஸ் பிரிவின் பொன்சேகா வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன்  சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.

சந்தேகநபரிடமிருந்து 110 கிராம் 17 மில்லிகிராம்  ஹெரோயின் போதைப்பொருள்  , 101 கிராம் 47 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  750,000 ரூபாய் பணத்தொகை எனபன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ன.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஈசி கேஸ் முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், களுத்துறை உயர் நீதிமன்றம் மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இரண்டு திறந்த பிடியாணையின் கீழ் உள்ளவர்  எனவும் தெரியவந்தது.

மேலும் , இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.