ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரைடோக்கன் அட்டைகள் வழங்கப்படும் என்று பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில் வரும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் டோக்கன் அட்டைகள் வழங்கப்படும் என்பதால், டோக்கன் அட்டைகளைப் பெறுவதற்கு முந்தைய இரவில் இருந்து வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்றும் திணைக்களம் தெரிவிக்கப்படுகின்றது.

