“வீதி விபத்துக்களை தவிர்ப்போம்” – மன்னாரில் விழிப்புணர்வு நாடகம்

128 0

மன்னார் உயிலங்குளத்தில் இயங்கும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) மாணவர்களின் ஏற்பாட்டில், “வீதி விபத்துக்களை தவிர்ப்போம்”  எனும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நாடகம் இன்று சனிக்கிழமை  (28) காலை  மணிக்கு மன்னார் பேருந்து நிலையத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது வீதி விபத்துக்களுக்கான முக்கியமான காரணங்கள், அதன் தீவிர விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நாடகம், பாடல்களை மாணவர்கள்  நிகழ்த்தினார்கள்.

மேலும், வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தும் முக்கியத்துவம், போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிக்கும் அவசியம் மற்றும் அவற்றை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே பொறுப்பான போக்குவரத்து பழக்கங்களை வளர்க்கும் நோக்கில் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது.

மேலும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களினால் மன்னார் பஜார் பகுதியில் சிரமதான பணியும் முன் னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.