கடமைகளை பொறுப்பேற்றார் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண

59 0

யாழ்ப்பாணம் மாவட்ட  புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண  சனிக்கிழமை (28) தனது கடமைகளை பொறுப்பேற்றார். 

யாழ்ப்பாணம்  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய இடத்துக்கு கொழும்பில் பணியாற்றிவந்த மாறப்பன அண்மையில் நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.