கைது செய்யப்படவுள்ள ராஜித?

70 0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இ​​லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் ராஜித சேனாரத்னவை குறித்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யவிருப்பதாக அவர் இதன்போது கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே, இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்