புத்தளம் மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புத்தளம் மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைக் பிரதிநிதித்துவப்படுத்தும் என்.எம்.என். நுஸ்னியின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புத்தளம் மாநகர சபையின் தலைவர் மற்றும் பிரதி தலைவரை நியமிப்பதில் கட்சி நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவின் முடிவுக்கு இணங்க செயல்படாததே இதற்குக் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

