முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் இன்று (26) பிற்பகல் 2.30 மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
13 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் தமிழரசுக் கட்சி 04 உறுப்பினர்களையும், ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலா இரண்டு ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 03 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும் கொண்டுள்ளன.
இதில் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் இராசையா நளினி 7 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
உபதவிசாளராக ஜனநாயக கூட்டணியை சேர்ந்த சத்தியமூர்த்தி சத்திய வரதன் 6 வாக்குகளை பெற்று தெரிவு செய்யபட்டார்.

