சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய சரக்கு விமான சேவை

75 0

சீனாவின் குன்மிங் மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையில் புதிய சரக்கு விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எப் விமான சேவையின் போயிங்  747 – 200 சரக்கு விமானம் இன்று வியாழக்கிழமை (26) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த சரக்கு விமானம் சீனாவின் குன்மிங் நகரத்திலிருந்து இன்று காலை 10.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த சரக்கு விமானம்  22 மெட்ரிக் தொன் நிறையுடைய பொருட்களுடன்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சீனாவின் குன்மிங் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையிலான சரக்கு விமானச் சேவையானது  ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.