பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், போதைப்பொருள் கடத்தல்காரரான “வெலே சுதா” என்று அழைக்கப்படும் சமந்த குமார என்பவர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு மேல் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

