ஒருகொடவத்தை பகுதியில் பயங்கர விபத்து

82 0

இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் ஒருகொடவத்தை பகுதியில் ஒரு கொள்கலன் லொறியொன்று முச்சக்கரவண்டி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.