“தொடம்வத்த சூட்டி நங்கி” உட்பட மூவர் கைது!

94 0

போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட “தொடம்வத்த சூட்டி நங்கி”  என்ற பெண் உட்பட மூவர் மஹியங்கனை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (24) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மூவரும் பதுளை , மஹியங்கனை, தொடம்வத்த பகுதியில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

“தொடம்வத்த சூட்டி நங்கி” என்ற பெண்ணும் அவரது தந்தை மற்றும் மைத்துனருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 10.4 கிராம் ஐஸ் போதைப்பொருள், 11 கையடக்கத் தொலைபேசிகள், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த 119000 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

“தொடம்வத்த சூட்டி நங்கி” என்ற பெண்ணின் தாயாரும் இதற்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.