அணையா விளக்கு போராட்டத்திற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு ( பேர்ள்) மனித புதைகுழிகளை தோண்டும்போது சர்வதேச பிரசன்னம் அவசியம் என்ற தமிழ் மக்களின் வேண்டுகோளிற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
பேர்ள் அமைப்பு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஜூன் 23 2025 அன்று யாழ்ப்பாணத்தின் செம்மணியில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு சர்வதேச நீதி கோரிசெயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மூன்று நாள் போராட்டத்திற்கு (அனையா விளக்கு அல்லது ‘அணைக்கப்படாத சுடர்’) ஒன்று கூடியுள்ளனர்.
ஆயுத மோதல் முடிவடைந்ததிலிருந்து இலங்கை முழுவதும் ஏராளமான மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் இந்தப் புதைகுழிகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை மறைக்கவும் பொறுப்பானவர்களைப் பாதுகாக்கவும் தீவிரமாக முயற்சித்தன இதனால் எந்த வழக்குத் தொடரவோ அல்லது தண்டனை வழங்கவோ முடியவில்லை.
அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாததால் காணாமல் போனவர்களின் தமிழ் குடும்பங்கள் மனித புதைகுழிகளை தோண்டும் போது சர்வதேச நீதி மற்றும் மேற்பார்வையை தொடர்ந்து கோரி வருகின்றன. ஆரம்ப கண்டுபிடிப்புக்கு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு செம்மணி புதைகுழிகளில் அகழ்வாராய்ச்சி இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் தொடங்கியது. மூன்று குழந்தைகள் உட்பட பத்தொன்பது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழிகள் தீவில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கான சான்றுகளைக் காட்டும் பல தளங்களில் ஒன்றாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் ஜூன் 23 2025 அன்று கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இது 2016 க்குப் பிறகு ஐ.நா. உரிமைகள் தலைவர் ஒருவர் இலங்கைக்கு முதன்முறையாக வருகை தருவதாகும். அவர் இந்த வாரத்தில் தமிழர் தாயகத்திற்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்மணிப் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எச்சங்களை மீண்டும் தோண்டி எடுக்கும் நிகழ்வுடன் அவரது வருகை ஒத்துப்போகிறது . அதையும் அவர் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் கோரிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செம்மணிப் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட களுக்கு சர்வதேச நீதி வழங்கவும் வடக்கு மற்றும் கிழக்கில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச கவனம் செலுத்தவும் கோரி தமிழ் போராட்டக்காரர்கள் மூன்று நாள் விழிப்புணர்வுப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பள்ளி மாணவி கிருஷாந்தி. செப்டம்பர் 7 1996 அன்று இலங்கை ராணுவத்தினராலும் காவல்துறையினராலும் அவர் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச் சென்ற அவரது மூன்று குடும்ப உறுப்பினர்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டிருந்தன. இந்தக் குற்றத்திற்கு எதிரான பொதுமக்களின் சீற்றம் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது செம்மணி புதைகுழிகள் இருப்பதை வெளிப்படுத்திய லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உட்பட பல வீரர்களைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியது
ஜூன் 1999 இல் அந்த இடத்திலிருந்து பதினைந்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன ஆனால் அரசாங்கம் விரைவில் மனித புiகுழிகளை தோண்டுவதை நிறுத்தியது.
பெயரிடப்பட்ட பல கல்லறைகள் சாட்சிகள் காணப்பட்டபோதிலும் டிசம்பர் 1999 இல் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கையை நிறுத்தியது.
2025 ஆம் ஆண்டில் மேலும் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் செம்மணி புதைகுழிகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தன. மே 2025 இல் அகழ்வாராய்ச்சிகள் மீண்டும் தொடங்கின ஜூன் தொடக்கத்தில் அந்த இடம் அதிகாரப்பூர்வமாக ஒரு மனித புதைகுழியாக அறிவிக்கப்பட்டது.
காணாமல் போனவர்களின் தமிழ் குடும்பங்கள் மற்றும் செம்மணிப் புதைகுழிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிக்கான அவசரத் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டக்காரர்களுடன் நிற்கிறது. மனிதப் புதைகுழிகள் தோண்டி எடுப்பதை சர்வதேச அளவில் கண்காணிக்க வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைகளை ஆதரிக்குமாறு Pநுயுசுடு சர்வதேச சமூகத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறது.

