அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தஹோ வாவியில் பெரிய அலையானது மேல் உயர்ந்தமையினால் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிழந்துள்ளதோடு, இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.
சனிக்கிழமை (21) மதியம் டி.எல். பிளிஸ் ஸ்டேட் பூங்கா அருகில் இந்த படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது, படகிலிருந்த 10 பேர் நீரில் மூழ்கியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
அவர்களில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இரண்டு பேர் காணாமல் போன நிலையில், திங்கட்கிழமை (23) அவர்களின்ல் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் மொத்தமாக 08 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிர்ப்பிழைத்தவர்களின் உறவினர்களின் அறிவிப்புகள் வரும் வரை அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
விபத்துக்குள்ளான படகில் 10 பேர் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்த போது 30 மீற்றர் வேகத்தில் காற்று வீசியதோடு, அலைகள் 6 முதல் 8 அடி வரை உயர்ந்ததாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை நாள் முழுவதும் தஹோ வாவியில் துடுப்புப் படகு சவாரி செய்தவர்கள் மற்றும் விபத்தில் சிக்கிய படகில் இருந்தவர்கள் உட்பட பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க கடற்படை மக்களுக்கு முன்னாயத்த நிலைமைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு வலியுத்தியுள்ளது.
“அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவரும் எப்போதும் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும், தண்ணீரில் இறங்குவதற்கு முன்னர் வானிலை நிலைமைகளைச் சரிபார்க்கவும், படகில் செல்வதற்கு முன்னர் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அறிக்க வேண்டும், உதவிக்கு அழைக்க ஒரு செயல்பாட்டு VHF வானொலியை எடுத்துச் செல்ல வேண்டும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அமெரிக்க கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

