பிரான்ஸ் இசை விழாவில் 145 பேருக்கு ஊசிக்குத்து: 12 பேர் கைது

76 0

பிரான்சில் இசை விழா ஒன்றின்போது 145 பேர் சிரிஞ்ச் ஊசியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

145 பேருக்கு ஊசிக்குத்து

பிரான்ஸ் முழுவதும் சனிக்கிழமை நிகழ்ந்த இசை விழாவின்போது, இரவு 9.15 மணியளவில் ஏராளமானோர் சிரிஞ்ச் ஊசியால் குத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தாக்குதலுக்குள்ளானவர்களில் பலர் 14 வயது முதல் 20 வயது வரையுள்ள பெண்கள். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த ஊசிகள் மூலம் அவர்கள் உடலில் ஒரு ரசாயனம் ஏற்றப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பொலிசார் வெளியிடவில்லை. அதை உறுதி செய்வதற்கான ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன. தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் நான்கு பேர், Angouleme நகரில் சுமார் 50 பேரை தாக்கியதாக கருதப்படுகிறது.

பரபரப்பை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.