ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2வது நாளாகவும் போராட்டம்

75 0

பெற்றோர் மற்றும் மாணவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக துணுக்காய்  வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பாண்டியன் குளம் மகாவித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றம்  செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய  பாட வேலைகளில் பாடங்கள் நடைபெறுவதில்லை என்றும் இங்கு நடைபெறுகின்ற ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவும் குறித்த போராட்டம் நேற்று திங்கட்கிழமை (23) காலை பாடசாலை முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில்  பெற்றோர்களின் போராட்டம் நடைபெற்ற சம நேரத்தில்  பாடசாலை மாணவர்களும் அதிபர் அலுவலகம் முன்பாக குறித்த  ஆசிரியர் இடமாற்றத்தை.  இரத்து செய்யுமாறு கோரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.