யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (23) பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

