கடவத்தையில் பாரிய தீ விபத்து – சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை

78 0

கடவத்தை நகரின் மையத்தில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் இன்று (23) இரவு தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் கட்டிடம் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா மற்றும் கொழும்பிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து, தற்போது கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

கடவத்தை மற்றும் எல்தெனிய விசேட அதிரடிப்படை முகாம்களின் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.

தீ விபத்து காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கடவத்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தவிர்க்க, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.