கட்சி இன, மத பேதமின்றி நகரை வெற்றி பெறச் செய்வோம் ; கொழும்பு மாநகர சபை முதல்வர்

93 0

இன, மத, மொழி பேதங்களைக் கடந்து மக்களுக்கு சேவையாற்றவே நாங்கள் இங்கு தெரிவு செய்யப்பட்டோம்,  ஆகவே நாம் அதனை மிகச் சிறப்பாக செய்து முடிப்போம் என கொழும்பு மாநகர சபையின் முதல்வர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்தார்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக கொழும்பின் முக்கிய தேர்தல் தொகுதிகளில் மக்கள் சந்திப்பு  கூட்டத் தொடரின் ஓர் அங்கமாக கொழும்பு 10 மாளிகாவத்தை – கெத்தாராமை பிரிவில் உள்ள மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் வேளையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வானது மாளிகாவத்தை சமாதி தர்ம நிலையத்தின் பிரதான பிக்குவான தங்காலை சாரத தேரரின்  தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களும் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்ற மாநகர சபை உறுப்பினர்களின் பங்களிப்புடனும் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் பிரதி மாநகர சபை முதல்வர் ஹேமந்த குமார கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.