சமாதானத்திற்கு வராவிட்டால் – எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்கள் – பல இலக்குகள் உள்ளன

67 0
image
ஈரான் சமாதானத்தை நாடாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்கள் இடம்பெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

 

மத்திய கிழக்கின் மிரட்டல்காரனான ஈரான்  இப்போது சமாதானத்தை ஏற்படுத்தவேண்டும்,அது நடைபெறாவிட்டால் எதிர்கால தாக்குதல்கள் மிகப்பெரியவையாக காணப்படும் என அமெரிக்காவிற்கான உரையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சமாதானம் அல்லது ஈரானிற்கு பெரும் துயரம் நிகழலாம் இது கடந்த 8 நாட்களாக நாம் பார்த்ததை விட பெரிய விடயங்கள் இடம்பெறலாம், மேலும் பல இலக்குகள் உள்ளன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏனைய இலக்குகளை துல்லியமாக வேகமாக திறமையுடன் அமெரிக்காவினால் தாக்கமுடியும்,ஒரு சில நிமிடங்களில் தாக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.