பதுளை – துன்ஹிந்த வீதியில் பஸ் கவிழ்ந்து விபத்து: மூவர் பலி; பலர் காயம்

58 0

அனுராதபுரம், தம்புதுதேகம பிரதேசத்தில் இருந்து பதுளை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த தனியார் பேருந்து வண்டியொன்று 21ஆம் திகதி சனிக்கிழமை மாலை பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை வீதி, 4ஆம் கட்டைப் பகுதியில் வீதியில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தின் காரணமாக  குறித்த பேருந்தில் பயணித்த 35 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் பாலித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இவ்விபத்து குறித்து பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  பேருந்தை செலுத்திய சாரதியினால் பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என பொலிஸார் ஆரம்பக் கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகம் வெளியிட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.