பூந்தோட்டம் – பெரியார்குளம் வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

72 0

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இருந்து பெரியார்குளம் முருகன் ஆலயம் வரையான 1200மீற்றர் நீளம் கொண்ட வீதி புனரமைக்கும்  பணிகள் சனிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டது.

கிராமப்புறவீதிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக அண்ணளவாக 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகரசபையின் வட்டார உறுப்பினர் சி.கிருஸ்ணதாசின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் ஒழுங்குபடுத்தலில் இந்த வீதி புனரமைக்கப்படுகின்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர், வீதி அமைக்கும் பணியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர் சி.கிருஸ்ணதாஸ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஸ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் பிரமேரஞ்சன், கிராமத்தின் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.