இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது காரில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது, காரின் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

