மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு!

57 0

அநுராதபுரத்தில் எலயாபத்துவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணிங்கமுவ பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

15 முதல் 18 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக வயலை சுற்றி சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே யானை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.