அரநாயக்கவின் தவிசாளர் பதவி SJB க்கு – உப தவிசாளர் பதவி சர்வஜன அதிகாரத்திற்கு

71 0

அரநாயக்க பிரதேச சபையின் அதிகாரத்தை நிலைநாட்டி, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி மஞ்சுள செனவிரத்ன இன்று (19) தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

உப தவிளாளர் பதவிக்கு சர்வஜன அதிகாரத்தின் ஜி.டபிள்யூ. இரேஷாவின் பெயர் முன்மொழியப்பட்டதை அடுத்து, திறந்த வாக்கெடுப்பு இல்லாமல் போட்டியின்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 13 இடங்களைப் பெற்று அரநாயக்க பிரதேச சபையை வென்றது.

இந்நிலையில், அரநாயக்க பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று பிற்பகல், சப்ரகமுவ உள்ளூராட்சி ஆணையாளர் எல்.எம்.பி.டபிள்யூ. பண்டார தலைமையில், பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தி சார்பாக ரோஹண திலீப் குமார பெர்னாண்டோவின் பெயரை அக்கட்சியின் உறுப்பினர் அகில சுதேஷ் பண்டாரவத்த முன்மொழிந்தார். இந்த முன்மொழிவை அதே கட்சியின் கசுன் பிரசாத் உததெனிய வழிமொழிந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக மஞ்சுள செனவிரத்னவின் பெயரை அக்கட்சியின் உறுப்பினர் துசித அபேரத்ன முன்மொழிந்தார். இந்த முன்மொழிவை அமில திவங்க குணதிலக வழிமொழிந்தார்.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன அதிகாரம், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மஞ்சுள செனவிரத்னவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் 13 வாக்குகளை மட்டுமே பெற்றார். மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அரநாயக்க பிரதேச சபை உறுப்பினர்களின் தேர்வு விவரம்:

ஐக்கிய தேசியக் கட்சி: 02

மக்கள் போராட்ட முன்னணி : 01

தேசிய மக்கள் சக்தி: 13

மக்கள் கூட்டணி: 01

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன: 02

ஐக்கிய மக்கள் சக்தி: 08

சர்வஜன அதிகாரம் : 03