இஸ்ரேலில் வைத்தியசாலைக்கு அருகில் ஏவுகணை தாக்குதல் – இலங்கை பெண் காயம்

61 0

இஸ்ரேலிய வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற ஏவுகணை தாக்குதல் காரணமாக இலங்கையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

இஸ்ரேலில் பராமரிப்பாளராக பணிபுரிந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார் என இஸ்ரேலிற்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.

டெல்அவியின் பீர்செபா வைத்தியசாலையில் நோயாளிஒருவரை பராமரிப்பதில் ஈடுபட்டிருந்த இலங்கை பெண் இரோசிகா சதுரதங்களனி வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக காயமடைந்தார் என நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், தூதரக பணியாளர்கள்  அவருக்கு உதவுவதற்காக அனுப்பப்படுவார்கள் என  தூதுவர் தெரிவித்துள்ளார்.