மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2025 சனிக்கிழமை 14.06.25 அன்று நொய்ஸ் நகரத்தில் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. முத்துவேல் ஜெயவலதாஸ் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க, தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வன் மிதுனன் இரட்ணராஜா அவர்கள் யேர்மனிய நாட்டுத் தேசியக்கொடியினையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பூபாலசிங்கம் திருபாலசிங்கம் அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியினையும் தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் நிர்வாகப் பிரிவுப் பொறுப்பாளர்
திரு , யனுசன் சந்திரபாலு அவர்கள் தமிழ்க்கல்விக்கழகக் கொடியினையும் ஏற்றிய பின்னர் அகவணக்கத்தோடு போட்டிகள் ஆரம்பமாகியது.
தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றிய வீரர்கள் மனமகிழ்வோடும் ஆர்வத்தோடும் ஒவ்வொரு போட்டிகளிலும் பதக்கங்களை வென்றெடுப்பதற்காக சளைக்காமல் போட்டியிட்டார்கள். யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரது நேர்த்தியான நடுவர்கள்
எமது மாவீரத் தெய்வங்களை தமது நெஞ்சங்களில்ச் சுமந்து மிகக் கண்ணியத்தோடும் பணிவோடும் கடமையாற்றியமை பாராட்டுக்குரியது.
போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
நிறைவாக யேர்மன் நாட்டின் தேசியக்கொடியும் தமிழீழத் தேசியக்கொடியும் அதனோடு தமிழ்க் கல்விக்கழகக் கொடியும் இறக்கிவைக்கப்பட்ட பின்னர் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்தோடும் 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இனிதே நிறைவு பெற்றது.