அமெரிக்க தலையிட்டால் அது முழுமையான யுத்தத்;திற்கு வழிவகுக்கும் என ஈரானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார்.
அல் ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு கட்டுப்படுத்த முடியும் என கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைந்துகொள்வதற்கு அமெரிக்கா தயராகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என சர்வதே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர்டோ உட்பட ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான உத்தரவில் டிரம்ப் கைச்சாத்திடுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது தொடர்பில் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்கள் மத்தியில் முழுமையான உடன்பாடில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

