ஈரானிற்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க தாக்குதலை மேற்கொண்டால் அது மீண்டும் சீர்செய்ய முடியாத சேதத்தை சந்திக்கும் என எச்சரித்துள்ள ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி ஈரானியர்கள் சரணடைபவர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஆன்மீக தலைவரின் உரை அந்த நாட்டின் தொலைக்காட்சியில் வாசிக்கப்படுகின்றது அதில் கமேனி ஈரானையும் அதன் மக்களையும் வரலாற்றையும் நன்கு அறிந்த புத்திசாலிகள் ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தும் தொனியில் பேசமாட்டார்கள்,ஏனென்றால் ஈரானியர்கள் சரணடைபவர்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

